அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் 178 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதன் ஒரு பகுதியாக ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி பேருந்து நிலையத்தில் மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார்.
அப்போது அதிமுக எம்.எல்.ஏ சித்ராவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார். தொடர்ந்து கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் அதிமுக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து பேசுகிறார். அதன்பின்னர் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்தும் முதலமைச்சர் பிராசாரம் மேற்கொள்கிறார்.