மோடியின் உழைப்பால் இந்தியா உயர்ந்துள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மோடியின் உழைப்பால் இந்தியா உயர்ந்துள்ளது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பிரதமர் மோடியின் உழைப்பால் இந்தியா உயர்ந்து நிற்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபாலன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் நம்முடைய கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று வாகை சூடுவார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடி ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் இந்தியாவை உயர்த்த இரவு பகல் பாராமல் உழைத்துவருகிறார். உலக அரங்கிலே இந்தியா வல்லரசாக உழைத்துக்கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியின் உழைப்பால் இந்தியா உயர்ந்து நிற்கின்றது. தமிழ்நாட்டு தேவையான திட்டங்களைக் கேட்கும் போதெல்லாம் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

  தமிழ்நாடு உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக விளங்க உதவிய மோடி தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் வளர்ச்சியடைந்துவருகிறது. தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுவருவதால் தொழில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முன்வருகின்றனர். ஈரோடு மக்களின் பெரும் கனவுத் திட்டமான அத்திக் கடவு, அவினாசி திட்டத்தையும் ஜெயலலிதாவின் அரசு நிறைவேற்றியுள்ளது. காவிரி - கோதாவரி திட்டத்துக்கு பிரதமர் மோடி நிச்சயம் உதவுவார்.

  திருப்பூர் மாநகராட்சிக்கு 950 கோடி ரூபாயிலே ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்டுவருகிறது. திருமண உதவித்திட்டத்தின் கீழ் 12,51,000 பேர் பயனடைந்துள்ளனர். 52 லட்சம் பேருக்கு மடிக்கணி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக செயல்பட்டதன் மூலம் கட்டுப்படுத்தினோம். கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்காக விலையில்லா அரசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருகள் வழங்கப்பட்டன’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: