எடப்பாடி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

 • Share this:
  சேலம் மாவட்ட எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலகர்களின் அலுவலகங்களிலும் வேட்புமனுத் தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலுள்ள தாலுகா அலுவலகத்தில் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

  வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எடப்பாடி தொகுதியில் 7- வது முறையாக போட்டியிடுகிறேன். 1989-ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்கு ஜெயலலிதா வாய்ப்பு அளித்தார். எடப்பாடி தொகுதிக்கு அருப்பணியாற்றியுள்ளேன். நாடு முழுவதும் கடனில் இருந்தாலும் வளர்ச்சிப் பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதிகமான ரேஷன் கடைகள், அங்கன்வாடி கட்டிடங்கள் திறந்துள்ளேன்.

  அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தியுள்ளேன். அடித்தட்டு மக்கள் அனைவரும் தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ளனர். ஒட்டுமொத்த மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் தேர்தல் அறிக்கை. தேர்தல் அறிக்கை மக்களிடம் எடுபட்டதா என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியும்’ என்று தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: