பொங்கல் பரிசாக அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பொங்கல் பரிசாக அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரம் எடுத்துள்ளநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து அவருடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட இருப்பாளியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்து, 47.20 லட்ச ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 8 பணிகளை திறந்து வைத்தும், 6.56 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

  தொடர்ந்து பேசிய அவர், ‘இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில் வரும் ஆண்டு 2.06 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஜனவரி 4-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். பச்சரிசி, சர்க்கரை 1 கிலோ, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் இவற்றுடன் நல்ல துணிப்பை ஒன்றும் கொடுக்கப்படும். துண்டுக்கரும்புக்குப் பதில் முழுக்கரும்பு வழங்கப்படும் என அறிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: