புதிய தொழில் கொள்கை: நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

புதிய தொழில் கொள்கை: நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

‘புதிய தொழில் கொள்கை’ மற்றும் ‘புதிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கொள்கை’ விரைவில் வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 • Share this:
  தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வெளியிட இருக்கிறார்.

  தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக ‘புதிய தொழில் கொள்கை’ மற்றும் புதிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில், இந்த இரண்டு தொழில் கொள்கையும் நாளை காலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள விழாவில் முதலமைச்சர் வெளியிடவுள்ளார்.

  மேலும், தமிழகத்தில் புதிய தொழில் துவங்க 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நாளை முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகிறது.

  இவைத்தவிர ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில், 20 தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை நாளை முதலமைச்சர் துவக்கி வைக்கிறார்.

  இதன் மூலம், நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

  Must Read: திருமண விழா: காத்திருந்த முதலமைச்சர்... பட்டு சட்டை அணிந்து வந்த துணை முதல்வர்

   

  அத்துடன், 4 சிப்காட் மற்றும் 6 டிட்கோ தொழிற் பேட்டைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: