சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு குடும்பத்தினருடன் நடந்து சென்று, வரிசையில் நின்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்.
அதிமுக முதலமைச்சர் வேட்பாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தனது வீட்டில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மற்றும் தனது தயார் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தனது குடும்பத்தினருடன் வாக்குச் சாவடி அமைந்துள்ள தொடக்கப்பளிக்கு நடந்து சென்று வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், “அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.