பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

Modi- Palanisamy

 • News18
 • Last Updated :
 • Share this:
  டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார்.

  டி.டி.வி.தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு, இடைத்தேர்தல் தேதி அறிவிக்காதது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு நிதி ஒதுக்காதது என தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக தலைநகர் டெல்லி சென்றுள்ளால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.  சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற அவருடன், அமைச்சர் ஜெயக்குமாரும், அதிகாரிகள் சிலரும் சென்றனர்.

  இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார் என தெரிகிறது. இதேபோல், தமிழகத்தின் நலன்சார்ந்த திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மனு அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  முன்னதாக நேற்றிரவு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 15-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.பி.க்களை சந்தித்து பேசினார். மேலும், இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் அனைத்து எம்.பிக்களையும் முதலமைச்சர் சந்தித்து பேச உள்ளதாகவும், தொடர்ந்து டெல்லி சமேதா பகுதியில் கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலக கட்டடத்தை பார்வையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  Published by:Vinothini Aandisamy
  First published: