7,000 கோடி ரூபாய் மதிப்பு தொழில்திட்டங்களைத் தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

news18
Updated: September 26, 2019, 5:39 PM IST
7,000 கோடி ரூபாய் மதிப்பு தொழில்திட்டங்களைத் தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
தொழில் திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தபோது
news18
Updated: September 26, 2019, 5:39 PM IST
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 7,175 கோடி ரூபாய் முதலீட்டுக்கான தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 3,431 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அதன் மூலம் சுமார் 10,50,000  நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்ட 7,175 கோடி ரூபாய் முதலீட்டுக்கான தொழில் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

இதில், டிசிஎஸ், இன்போசிஸ், ஜெர்மனியின் ஸ்விங் செட்டர், ஜப்பானின் நிசி, கொரியாவின் யங்வா உள்ளிட்ட நிறுவனங்கள் 7,175 கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்க உள்ளன. இதன் மூலம் 45,846 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Loading...

Also see...

First published: September 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...