பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும்? - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எப்போது முடிவெடுக்கப்படும்? - முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்..
முதலமைச்சர் பழனிசாமி
  • Share this:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறுகிறது. அதேநேரம் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், தொற்று பரவல் அதிகரிக்குமோ என அச்சம் உருவாகி உள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மூத்த அமைச்சகள், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய முதலமைச்சர், பண்டிகை காலத்தின்போது மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

மேலும், கொரோனா சிகிச்சைக்காகவும், நிவாரணப் பணிகளுக்காகவும் இதுவரை 7,372 கோடியே 25 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் 35 விழுக்காட்டினருக்கு மேல் முகக்கவசம் அணிவதில்லை என்றும் குறிப்பிட்ட அவர், காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அனைவரும் முகக்கவசம் அணிவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், நோய் பரவல் இல்லா நிலையை உருவாக்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

தமிழக அரசின் திறமையான நடவடிக்கையால் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதாக கூறிய முதலமைச்சர், பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


மாவட்ட ஆட்சியர்களை தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினர். தலைமைச்செயலத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ நிபுணர் பிரப்தீப் கவுர், சுகாதாரத்துறை செயலளார் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க.. பண்டிகை காலத்தில் வங்கிகள் வழங்கும் வட்டி இல்லாத EMI திட்டங்கள் குறித்த விவரம்


இதில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்தவெளியில் வகுப்புகளை தொடங்கவும், தொழிற்சாலைகளில் கொரோனா தடுப்பு பணிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆய்வு நடதவும் மருத்துவ நிபணர்கள் குழு அரசுக்கு ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
First published: October 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading