வன விலங்குகள் குடியிருப்புக்குள் நுழையாமல் தடுக்க சூரிய சக்தி மின் வேலி - முதலமைச்சர் பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு கான்கீரிட் வீடு கட்டி தரப்படும் என்றும், வன விலங்குகள் குடியிருப்புக்குள் நுழையாமல் இருக்க சூரிய சக்தியில் இயங்கும் மின் வேலி அமைத்து தரப்படும் என்றும் கூடலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 • Share this:
  அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு கான்கீரிட் வீடு கட்டி தரப்படும் என்றும், வன விலங்குகள் குடியிருப்புக்குள் நுழையாமல் இருக்க சூரிய சக்தியில் இயங்கும் மின் வேலி அமைத்து தரப்படும் என்றும் கூடலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

  நீலகிரி மாவட்டம் கூடலூரில் புதிய பேருந்து நிலையம் அருகில் அதிமுக வேட்பாளர் பொன். ஜெயசீலனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “வேட்பாளர் பொன் ஜெயசினனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

  புரட்சி தலைவிக்கு பிடித்த மாவட்டம் நீலகிரி. நீலகிரி மாவட்டத்திற்க்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியவர் புரட்சி தலைவி. மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ கல்லூரி இந்த அரசால் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு 440 கோடி செலவில் பணிகள் நடைப்பெற்று வருகிறன. விரைவில் பணி முடித்து நானே வந்து திறந்து வைப்பேன்.

  பசுமை திட்டத்தின் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு 800 கன்கிரிட் வீடு கட்டி தரப்பட்டுள்ளது. கூடலூர் தொகுதியில் 8 அம்மா மினி கிளினிக் துவங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் கூட்டுறவு சங்கள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூடலூர், கொள்ளப்பள்ளி பகுதியில் 13 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன.

  நடுவட்டம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. நீலகிரி ஒரு சுற்றுலா நகரம். அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று வரும் போது இந்த தொகுதிகளுக்கு மேலும் பல நல்ல திட்டங்களை கொண்டுவரப்படும். இந்த தொகுதி மக்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும்.

  சட்ட ஒழுங்கில் சிறந்த மாநிலம் தமிழ் நாடு. கூடலூர் சட்டமன்ற தொகுதியில்நீண்ட கால கோரிக்கையான செக்சன் 17 பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோக குடிநீர், மின்சாரம் இனைப்பு இல்லாதவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  Must Read : ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது : முதலமைச்சர் வாழ்த்து

   

  அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு கான்கீரிட் வீடு கட்டி தரப்படும். அத்துடன், வன விலங்குகள் குடியிருப்புக்குள் நுழையாமல் இருக்க சூரிய சக்தியில் இயங்கும் மின் வேலி அமைத்து தரப்படும்”  இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
  Published by:Suresh V
  First published: