ஏழை எளியவர்கள் ஏற்றம் பெற சிறப்பான ஆட்சியை வழங்குகிறது அதிமுக - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஏழை எளியவர்கள் ஏற்றம் பெற சிறப்பான ஆட்சியை வழங்குகிறது அதிமுக - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அரசு அதிகாரியை தேடி மக்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், 1100 ல் புகார் அளிக்கலாம் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மக்கள் அரசு அதிகாரியை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், 1100 ல் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

    வள்ளியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் ஒரு குழந்தைக்கு ‘தர்ஷன்’ என பெயர சூட்டினார்.

    பின்னர் பேசிய அவர், “எனது அனுபவ வயதுதான் உதயநிதிக்கு என்றும், அதிமுகவை விமர்சிக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். திமுகவில் குடும்பத்தை தவிர்த்து வேறு எவரும் பிரச்சாரத்திற்கு செல்வதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

    அரசு அதிகாரியைத் தேடி மக்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறிய முதலமைச்சர் 1100 ல் புகார் அளிக்கலாம் என்றும், தமிழக அரசுக்கு இதுவரை 55 ஆயிரம் புகார்கள் வந்திருப்பதாகவும், அதிமுக அரசு நிச்சயம்  அதை நிறைவேற்றுவோம் எனவும் உறுதியளித்தார்.

    இதனால், ஸ்டாலின் பெட்டி வைத்து மனு வாங்க வேண்டிய அவசியம் இனி இல்லை. திமுகவினருக்கு கொடுத்து பழக்கம் இல்லை எடுத்து பழக்கபட்டவர்கள் அவர்கள் என்றும் அப்போது குற்றம் சாட்டினார்.

    30 ஆண்டு காலம் அதிமுக தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி இருப்பதாகவும், அதில் 15 ஆண்டு காலம் ஜெயலலிதாக சிறப்பான ஆட்சியை கொடுத்ததாகவும் பெருமை தெரிவித்தார். ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற சிறப்பான ஆட்சியை அதிமுக. எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் மக்கள் ஏற்றம் பெற முடிந்தது என்றும் எடப்பாடி பழனிசாமி அப்போது தெரிவித்தார்.

    எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் வாரிசு இல்லை என்று கூறிய அவர், அவர்கள் மக்களுக்காக உழைத்தார்கள் என்றார். தனது தலைமையிலான 4 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த திமுக ஆட்சியோடு தற்போதுள்ள ஆட்சியை ஒப்பிட்டு பாருங்கள். ஸ்டாலின் பச்சை பொய்யை போகும் இடமெல்லாம் அவதூறாக சொல்லி வருகிறார் என்றும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டத்தின் 4 ஆம் கட்ட பணி தற்போது நடைபெற்று வருவதாக கூறி, பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் பட்டியலிட்டு காட்டினார்.

    Must Read : கோவையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை அமைக்க பூமி பூஜை: தடபுடலான ஏற்பாடுகள்

     

    அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கிடு மூலம், 435 பேர் மருத்துவ கல்லூரி, பல் மருத்து கல்லூரிகளில் இடம் கிடைத்து படித்து வருகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் இல்லை . 52 லட்சம் பேருக்கு மடிகணினி வழங்கியுள்ளோம். உயர் கல்வியில் தமிழகம் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், நாட்டில் உயர் கல்வியில் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கின்றது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    Published by:Suresh V
    First published: