ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

ஜெயலலிதா நினைவு இல்லம்

ஜெயலலிதா நினைவு இல்லம்

ஜெயலலிதா நினைவு இல்லத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்க கூடாது. அந்த பகுதியில் மக்களுக்கு இடையுறு ஏற்படுத்தும் வகையில் எந்த பேனர்களும் வைக்க கூடாது என்று நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள "வேதா நிலையம்" இல்லம், ஜெயலலிதா நினைவு இல்லமானது. அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற அதிமுகவின் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற முதலமைச்சர் பழனிசாமி, வேதா இல்லத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழு அளித்த பரிந்துரையின் பேரில் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டனர்.

  அத்துடன், வர்ணம் தீட்டப்பட்டு, ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்றன. இந்நிலையில், நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள வேதா நிலையம் இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்த்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அதிமுக நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

  ஜெயலலிதா நினைவு இல்லம்

  இந்நிலையில், திட்டமிட்டபடி, வேதாநிலையத்தை நினைவு இல்லமாக திறந்து வைக்கலாம் என்றும், திறப்பு விழா முடிந்த பின், வேதா நிலையத்தின் சாவியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா, தீபக் அறிவிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் உள்ள பொருட்களை அவர்கள் முன்னிலையில் கணக்கெடுக்க வேண்டும் அதுவரை நினைவு இல்லத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்க கூடாது. அந்த பகுதியில் மக்களுக்கு இடையுறு ஏற்படுத்தும் வகையில் எந்த பேனர்களும் வைக்க கூடாது என்று நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

  மேலும் படிக்க... ஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி... மெரினாவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் (படங்கள்)

  இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா நினைவு இல்லத்தில் பொதுமக்களை அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Jayalalithaa, Veda nilayam