தமிழ், மலையாள புத்தாண்டு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி

தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டு தினங்களை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டு தினங்களை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

  நாளை சித்திரை மாதம் பிறக்க உள்ளது. அதன்படி தமிழ்ப் புத்தாண்டான நாளை தமிழகம் முழுவதும் மக்கள்  கோலாகலமாக கொண்டாட உள்ளனர்.

  இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழர்களின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும். ஆதிமனிதன் தமிழன்தான் அவன் மொழிந்த‌தும் செந்தமிழ்த்தேன்” என்ற பாரதிதாசனின் கவிதையை மேற்கோள் காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இதேபோன்று, மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகையை முன்னிட்டும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “மலையாள மொழி பேசும் மக்களின் வாழ்வில் அன்பும் மகிழ்ச்சியும் மலரட்டும்” என தெரிவித்துள்ளார்.

  Must Read :  இந்தியாவில் ஒரே நாளில் 1.61 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு - 879 பேர் உயிரிழப்பு

   

  இந்நிலையில், தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டாகிய யுகாதி பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. தென் இந்திய மாநிலங்களில் அடுத்தடுத்து வருடப் பிறப்பு வருவது தென்னிந்தியாவின் கலாச்சார ஒற்றுமையை எடுத்துக்காட்டுவதாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: