'வானதி சீனிவாசன் நமது எண்ணங்களை பிரதமரிடம் கொண்டு செல்லும் தூதுவராக இருப்பார்' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வானதி சீனிவாசன் நம்முடைய எண்ணங்களை பாரத பிரதமரிடம் கொண்டு செல்லும் தூதுவராக இருப்பார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
  தொண்டாமுத்தூரில் வேலுமணி திறமையானவர். கொடுக்கின்ற பணியை சிறப்பாக செய்பவர். வானதி சீனிவாசன் நம்முடைய எண்ணங்களை பாரத பிரதமரிடம் கொண்டு செல்லும் தூதுவராக இருப்பார். 234 தொகுதிகளிலும் வெற்றி என ஸ்டாலின் தவறான தகவல்களை சொல்கின்றார்.

  எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலினால் வெற்றி பெற முடியாது. தமிழகம் வளர்ச்சியை பெற இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. கோவையில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

  அதிமுக எதுவும் செய்யவில்லை என உண்மைக்கு மாறான தகவல்களை ஸ்டாலின் சொல்கின்றார். கோவையில் மட்டுமே ஏராளமான திட்டங்களை இந்த அரசு செய்து இருக்கின்றது . குடும்ப அரசியல் செய்கின்ற கட்சி அல்ல அதிமுக. நாட்டு மக்களுக்காக இருக்கும் கட்சி அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் என கூறிய முதல்வர் திட்டமிட்டுள்ள பணிகளையும் வரிசைபடுத்தினார்.  மெட்ரோ ரயில் கொண்டு வர 6,700 கோடியில் திட்டம் தயாராகி வருகின்றது. விமான நிலைய விரிவாக்கம், கோவை மேற்கு புறவழிச்சாலை கொண்டு வரப்படுகின்றது. பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் நகரம் கோவை மாநகரம் என தெரிவித்தார்.

  ALSO READ :  'கள்ள வாக்குகளுக்காக போலி ஆவணங்கள் திமுக தயாரிக்கிறது ' - சைதை துரைசாமி

  மேலும் நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக. நீட் தேர்வை எதிர்த்து கொண்டு இருக்கின்றோம். கோவையில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். கிரிக்கெட் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்,  ராணுவத் தளவாட உதிரிபாக தொழிற்சாலை உருவாக்கப்படும். இதன் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படும்.ஸ்டாலின் ஊர் முழுவதும் சுற்றி, அதிமுக எந்த பணியும் செய்யவில்லை என்ற பச்சை பொய்யை சொல்லி வருகின்றார்.

  ஊழல் என்ற பொய்யான தகவலை தொடர்ந்து 13 முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு போட்டு அது நடந்து வருகின்றது. 5 ஆண்டுகாலமாக வாய்தா வாங்கி கொண்டு இருக்கின்றனர்.
  ஸ்டாலின் கவர்னரிடம் ஒரு புகார் பட்டியலை கொடுத்து இருக்கின்றார். அதில் 600 கோடி ஊழல் செய்து இருப்பதாக சொல்கின்றார். அந்த டெண்டர் ரத்து செய்து 2 ஆண்டுகள் ஆகின்றது.குறைகளை செல்லும் போது ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

  ALSO READ :  'தேர்தலுக்கும், விருதுக்கும் தொடர்பில்லை' - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

  ஊழல் குற்றசாட்டுகள் குறித்து இதே கொடிசியா மைதானத்தில் மேடை போட்டி விவாதிக்கலாம். மக்கள் நீதிபதியாக இருந்து நீதி வழங்கட்டும். மடியிலே கனமில்லை. யாருகிட்ட டூப் அடிச்சிகிட்டு இருக்கின்றீர்கள். இதெல்லாம் எடுபடாது.

  உங்கள் முன்னாள் அமைச்சர்கள் ஏன் நீதி மன்றத்தில் வாதாடி ஜெயிக்காமல் இருக்கின்றனர். மெகா ஊழல் கட்சி திமுக, ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஓரே கட்சி திமுக . இஸ்லாமிய மக்களுக்கு நிறைய திட்டங்களை இந்த அரசு செய்து வருகின்றது. இஸ்லாமிய மக்களை குழப்பி வாக்குகளை பெற முயல்கின்றனர். அதற்கு பலியாகிவிடாதீர்கள். அனைதரது மக்களின். உணர்வுகளை பிரதிபலிக்கும அரசாக அதிமுக அரசு இருக்கின்றது.  சிறுபான்மை மக்கள் அச்சமின்றி மகிழ்ச்சியோடு வாழலாம். தமிழகத்தில் 40 ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. அதில் 33 கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. மீதமுள்ள 7000 கோவில்கள் சீர்செய்து புனரமைக்கப்படும். பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

  திமுகவிற்கு இந்த தேர்தல் இறுதி தேர்தலாக இருக்க வேண்டும். திண்டுக்கல் லியோனி, தயாநிதி ஆகியோர் பெண்களை கொச்சைபடுத்தி பேசுகின்றனர். அவர்களை அவர்கள் கட்சி தலைமை கண்டிப்பதில்லை. விஸ்வகர்ம சமுதாயம் சில கோரிக்கைகள. வைத்து இருக்கின்றனர்.அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார களத்தில் பேசியுள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: