முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்க வெளிநாடுகளிலிருந்து நவீன கருவிகள் வாங்க ஆலோசனை - அமைச்சர் தகவல்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்க வெளிநாடுகளிலிருந்து நவீன கருவிகள் வாங்க ஆலோசனை - அமைச்சர் தகவல்

  • 1-MIN READ
  • Last Updated :

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்பதற்காக வெளிநாடுகளிலிருந்து நவீன கருவிகள் வாங்குவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் “தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளபட்டதால் நீர்வரத்து கால்வாய்களில் அடைப்புகள் இல்லாமல் கண்மாய்கள், குளங்கள் 100 சதவீதம் நிரம்பி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து சுஜித் மரணம் குறித்து கேட்ட போது “பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும்,  மீறுவோருக்கு தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தவர்களை மீட்பதற்காக வெளிநாடுகளில் இருந்து நவீன கருவிகள் வாங்குவது தொடர்பாகவும் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

பார்க்க :

மழைக்கால நோய்களில் இருந்து குழந்தைகளை தற்காத்துக் கொள்வது எப்படி?

First published:

Tags: Borewell Hole