ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

ஜெயலலிதா (கோப்பு படம்)

ஜெயலலிதா (கோப்பு படம்)

சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா முழு உருவ சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து உரையாற்றினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்’ ஜெயலலிதா நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள அந்த இல்லத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    இந்த விழாவில்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    மேலும் படிக்க.... ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

    அதனைத் தொடர்ந்து, சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா முழு உருவ சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது, ஜெயலலிதா பிறந்நாள் அரசு விழவாகக் கொண்டாடப்படும் என்று அறித்தார்.

    Published by:Suresh V
    First published:

    Tags: Edappadi palanisamy, Jayalalithaa