2021-ல் தமிழகத்தில் யார் ஆட்சி? சட்டசபையில் முதலமைச்சர், ஸ்டாலின் விவாதம்!

2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என்று ஸ்டாலின் தெரிவித்ததற்கு, யாரை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

2021-ல் தமிழகத்தில் யார் ஆட்சி? சட்டசபையில் முதலமைச்சர், ஸ்டாலின் விவாதம்!
முதல்வர் மற்றும் ஸ்டாலின்
  • Share this:
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு யாருடைய ஆட்சி நடைபெறும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவரிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க கொறடா சக்கரபாணி, உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றியைப் பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார் .

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக கூறும் தி.மு.க விக்கிரவாண்டி மற்றும்  நாங்குநேரி இடைத் தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.


மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டிய அவர், மக்கள் உண்மையை புரிந்து கொண்டதால் இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றியை தந்ததாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலின் போது மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக வெற்றி பெற்றதாக குறிப்பிட்ட முதலமைச்சர் அத்தொகுதியில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றதாகவும், மக்களிடம் அதிமுகவின் செல்வாக்கு  கூடியிருக்கிறது என்பதையே இது காட்டுவதாகவும்,  அதிமுகவின் செல்வாக்கு மக்களிடம் சரியவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மிக விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும் போது நாடாளுமன்றத் தேர்தலில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்று கூறினார்.தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 2021-ல் நிறைவேற்றுவதற்கான வாக்குறுதிகளை, நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏன் தெரிவித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதோடு, தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருப்பதாகவும், ஆனால் ஆட்சியிலேயே இல்லாத திமுக செய்ய முடியாத திட்டங்களை கூறி மக்களை ஏமாற்ற முயற்சித்ததாகவும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார். மேலும், 2021-ல் யாரை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Also see...
First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading