கொரோனா தடுப்பூசியை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் போட்டுக்கொண்டு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் - மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசியை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் போட்டுக்கொண்டு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் - மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

அமமுகவை விட அதிமுகதான் எங்கள் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.

 • Share this:
  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பண்ணீர்செல்வம் ஆகியோர் கோவேக்சின் மருந்தை தங்களது உடலில் செலுத்திக்கொண்டு தமிழக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி தர வேண்டும் என முன்னாள் மேயர், எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

  திமுகவின் சின்னத்தை தமிழக மக்களின் மனதில் ஆழப் பதிய வைக்கும் வகையில் 6000 பேர் கலந்து கொண்டு சாதனை படைக்க உள்ளனர். இந்த இடத்தை பார்வையிட்டார் திமுக மாவட்ட செயலாளரும், சைதை சட்டமன்ற உறுப்பினருமன மா.சுப்பிரமணியன்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘வெறுப்பு அரசியலை தொடர்ந்து செய்துகொண்டிருப்பவர் கராத்தே தியாகராஜன். திமுகவை விமர்சனம் செய்தால்தான் அவர் இருக்கும் இடம் நிலைக்கும் என்பதற்காக செய்துகொண்டிருக்கிறார்.

  அமமுகவை விட அதிமுகதான் எங்கள் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. முதலமைச்சர், துண முதல்வர், அமைச்சர்கள் செய்யும் தவறுகள் திமுகவிற்கு வெற்றிக்கு காரணமாக உள்ளது.

  திமுக ஆட்சி காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் 6 லட்சத்து 70 ஆயிரம் குடும்பங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்தவர்களுக்கு பட்டா வழகினைர்.

  ஆனால் கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக அரசு இதுவரை ஒருவருக்குகூட ஆட்சோபனையற்ற நிலங்களில் குடியிருப்போர்களுக்கு பட்டா வழங்க முயற்சி கூட எடுக்கவில்லை என குற்றச்சாட்டி வீடு இங்கே பட்டா எங்கே என்ற போராட்டத்தை நடத்தினோம் அதை தொடர்ந்து தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டனர். அதில், சென்னையை தவிர்த்த மற்ற இடங்களுக்கு பட்டா வழங்குகிறோம் என்று குறிப்பிட்டிருந்ததே தவிர ஆட்சோபனையற்ற நிலங்களுக்கு பட்டா வழங்குகிறோம் என்று குறிப்பிடவில்லை. என குற்றம்சாட்டினார் மா.சுப்பிரமணியன்.

  மேலும், ‘போகாது ஊருக்கு சரியான பாதையாக தெரியவில்லை’ என அதிமுக அரசை விமர்சித்தார். மேலும், ‘அங்கிகாரம் இல்லாத மனைகளுக்கு பட்டா வழங்க கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தபோது கேளா காதினராக இருந்த அதிமுக அரசு திடீரென ஒரு அறிவிப்பு அளித்துள்ளனர். அதில் அங்கிகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்ய கடைசி நாள் இந்த மாதம் 28ம் தேதி என்று குறிப்பிட்டுள்ளதாகவும், ஆட்சி முடியும் தருவாயில் அறிவிப்பை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிற ஒரு காரியத்தை இந்த எடப்பாடி அரசு செய்வதாக’ மா.சுப்பிரமணிமன் குற்றம்சாட்டினார்.

  கொரோனா தடுப்பூசி முதலாவதாக வந்த 5 லட்சத்து 36 ஆயிரம், இரண்டாவதாக வந்துள்ள 5 லட்சத்து 56 ஆராயிரம் மருந்துகள் வந்துள்ளன. முதலாவதாக வந்த மருந்தை பாதி கூட இதுவரை பயன்படுத்தவில்லை எனவும் மருந்து காலாவதியாக காலம் 6 மாதம் தான்.

  அக்டோபர் மாதத்தில் தயாரிக்கப்பட்ட மருந்து ஏப்ரல் மாதத்திற்குள் காலாவதியாகிவிடும். இதுவரை பாதி கூட பயன்படுத்தாத அரசு ஏப்ரல் மாதத்திற்குள் எப்படி முழுமையாக பயன்படுத்துவார்கள் என்ற கேள்வியை மா.சுப்பிரமணியன் எழுப்பினார்.

  தமிழக அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூட இதுவரை முழுமையாக போட்டுக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை எழுப்பினார்.

  கோவேக்சின் மருந்தின் எதிர்ப்பு தன்மை 40% முதல் 50% வரை தான் ஐரோப்பிய நாடுகளில் வீரியம் அதிகமாக உள்ளதாகவும், ஆகையால்தான் மருத்துவர்கள் முழுமையாக போட்டுக்கொள்ளவில்லை. தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பண்ணீர்செல்வம் கோவேக்சின் மருந்தை தங்களது உடலில் செலுத்திக்கொண்டு தமிழக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

  மேலும் உதயசூரியன் சின்னத்தை தமிழக மக்களின் மனதில் ஆழ பதிவு செய்யும் வகையில் world cards union என்கிற உலக சாதனை புத்தகத்திலும், Asia books of records என்ற ஆசியா சீனா புத்தகத்திலும் உதயசூரியன் சின்னத்தை இடம்பெற வைக்கிறோம்.

  Must Read : சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக சார்பில் விருப்ப மனு அளிப்பதற்கான தேதிகள் அறிவிப்பு

   

  6000 இளைஞர்கள் திமுகவின் சின்னம் உதயசூரியன் வடிவில் என்று Human image of risingcen என்ற தலைப்பில் சாதனை படைக்க இருக்கிறார்கள் திமுக இளைஞரணியினர். அந்த சாதனைக்காக ஆவணங்களை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பெற்றுக்கொள்கிரார் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: