Eid Mubarak | தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு!

கோப்புப் படம்

Ramadan 2021 | இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும்.

    30-வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி,  30-வது நாளான இன்று பிறை தெரியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது.

    Also read... கொரோனா பரவல் : சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

    இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைப்பிடிக்கப்படும். அதன் பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

    இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: