தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியில் மாற்றம் - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 15ம் தேதிக்குப் பதிலாக ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியில் மாற்றம் - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு
சத்யபிரதா சாகு
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 7:48 PM IST
  • Share this:
வரும் நவம்பர் 16ம் தேதியன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும், அன்று முதல் டிசம்பர் 15ம் தேதிக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுடைய வாக்காளர்கள், பெயரை நீக்க விரும்புவோர், திருத்த விரும்புவோர், இடமாற்றம் விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பங்களை (6, 7, 8, 8ஏ) அளிக்க வேண்டும்.

இதுதொடர்பான விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5ம் தேதி இறுதி செய்யப்படும். ஜனவரி 15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.Also read: கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களில் தொல்லியல்துறை இயக்குநர் உதய்சந்திரன் ஆய்வு - அருங்காட்சியகப் பணிகளைத் துரிதப்படுத்த அறிவுறுத்தல்


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடந்த செப்டம்பர் 3ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15ம் தேதிக்குப் பதிலாக ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தேதி மாற்றத்துக்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading