CHIEF ELECTORAL OFFICER SATHYA PRATHA SAHOO SAID 3 FLYING SQUADS SET UP FOR EACH ASSEMBLY CONSTITUENCY VIN TAMI
மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டுமா? சத்யபிரதா சாகு விளக்கம்!
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் அரசு மற்றும் பொது இடங்களில் சொத்துகளில் 61,000 போஸ்டர், பேனர்கள் போன்றவை நீக்கியுள்ளதாகவும் அது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிப்பதாக சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு படை, வீடியோ பதிவு செய்யும் குழு, கணக்கீட்டு குழு உள்ளிட்ட 5 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அதில் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படை குழுவினர் 3 நிலை கண்காண்இப்பு குழுவினரும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் அரசு மற்றும் பொது இடங்களில் சொத்துகளில் 61,000 போஸ்டர், பேனர்கள் போன்றவை நீக்கியுள்ளதாகவும் அது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிப்பதாகவும் தெரிவித்தார்.
அதே போல தனியார் பொது இடங்களில் 21,000 போஸ்டர்கள் பேனர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பாக 36 வழக்குகள் என மொத்தமாக 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் பணிக்காக மொத்தமாக 330 கம்பெனி துணை இராணுவப்படையினர் கோரியிருப்பதாகவும் தற்போது வரை 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மறைந்த தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்களிப்ப்பதற்கு வசதியாக அவர்கள் இல்லத்திற்கே சென்று அதிகாரிகள் அறிவுருத்துவார்கள். 12 டி படிவங்களை பூர்த்தி செய்பவர்கள் தபால் வாக்குகள் அளிக்கலாம், அவர்கள் நேரடியாக சென்று வாக்களிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.