HOME»NEWS»TAMIL-NADU»chief electoral officer said the construction work of voting machine storage depots will be completed by march 31 vin tami

தமிழகத்தில் 31 வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாாரி!

சென்னை மாவட்டத்தில் கட்டுமான பணிக்கான டெண்டர் முடிவுற்று கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 31 வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாாரி!
வாக்குபதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கு
  • News18
  • Last Updated :
  • Share this:

தமிழகத்தில் வாக்குபதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்குகளின் கட்டுமான பணிகள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடிவடையும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு  வெளியிடுள்ள செய்திக் குறிப்பில், இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் 32 மாவடங்களில் வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கு அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 30 மாவட்டங்களில் சேமிப்பு கிடங்குகளை அமைக்க தமிழக அரசு சார்பில் 120 கோடியே 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.



Also read... தமிழகத்தில் 2 கட்டங்களாக தேர்தலா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

அதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் சேமிப்பு கிடங்கு அமைக்க 6.19 கோடியும், சென்னை மாவட்டத்தில் அமைக்க 7.16 கோடியும் நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது வரை தருமபுரி, நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தேனி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் சேமிப்பு கிடங்குகள் கட்டுமானப் பணிகள் முடிவுற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள 31 கிடங்குகளின் கட்டுமான பணிகள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடிவுற்று பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை மாவட்டத்தில் கட்டுமான பணிக்கான டெண்டர் முடிவுற்று கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: