• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு இன்று சென்னை வருகை... சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு இன்று சென்னை வருகை... சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

தலைமைத் தேர்தல் ஆணையர்  சுனில் அரோரா

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

தமிழகம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வுசெய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு, இன்று சென்னை வர உள்ளது.

  • Share this:
    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வுசெய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார், தலைமைச் செயலாளர் உமேஷ் சின்கா மற்றும் அதிகாரிகளைக் கொண்ட குழு இன்று காலை 11 மணிக்கு தமிழகம் வர உள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இந்தக் குழுவினர் மதியம் 12.15 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து, தலைமைத் தேர்தல் அதிகாரி, காவல் துறை உயர் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகின்றனர். பயணத்தின் இரண்டாவது நாளான நாளை, தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

    மேலும் படிக்க... அதிமுக-வை பின்னடைய செய்ய சிலர் முயற்சி: முதல்வர் பழனிசாமி காட்டம்

    புதுச்சேரிக்கு நாளை செல்லும் தேர்தல் ஆணைய குழுவினர் நாளையும், நாளை மறுதினமும் ஆய்வு நடத்துகின்றனர். நாளை மறுதினம் இரவு கேரளாவுக்கு சென்று தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வுசெய்ய உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: