வாக்களிக்க கூடுதலாக ஒரு மணி நேரம்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

வாக்களிக்க கூடுதலாக ஒரு மணி நேரம்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

அரசியல் கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், 24 மணி நேரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு  தமிழகம் வந்தது. அந்தக் குழுவினர் பலவேறு தரப்பினருடன் அலோசனை நடத்தினர்.

  இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, வாக்களிப்பதற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

  மேலும், கூடுதலாக 25 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும், பணப்பட்டுவாடாவைத் தடுக்க, கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

  அரசியல் கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், 24 மணி நேரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

  தேர்தல் செலவின கண்காணிப்பாளர்கள் இரண்டுபேர் நியமிக்கப்படுவார்கள் என்றும், அமைதியான முறையிலும், நேர்மையான முறையினலும் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

  மேலும் படிக்க... தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விரிவான ஆலோசனை

   

  முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று கூறிய சுனில் அரோரா, புதிய வாக்காளர்கள் அனைவரும் இந்த தேர்தலில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
  Published by:Suresh V
  First published: