முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தர்மபுரி ரத்த வங்கி: தலைமை மருத்துவர் உள்பட 12 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தர்மபுரி ரத்த வங்கி: தலைமை மருத்துவர் உள்பட 12 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவுக்கு, பீலா ராஜேஷ் எழுதிய கடிதத்தில், தருமபுரி ரத்த வங்கியைச் சேர்ந்த 12 பேர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த வங்கியை முறையாக பராமரிக்காத விவகாரத்தில் தலைமை மருத்துவர் உள்பட 12 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்த வங்கியில் ரத்தம் வாங்கி செலுத்தியவர்கள், தொடர்ந்து உயிரிழந்ததாகவும், பலர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகாரில், சிறப்பு ஆய்வுக் குழுவினர் கடந்த ஜனவரி மாதம் சோதனை மேற்கொண்டதில், ரத்த வங்கி முறையாக பராமரிக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷிடம் ஆய்வுக்குழுவினர் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவுக்கு, பீலா ராஜேஷ் எழுதிய கடிதத்தில், தருமபுரி ரத்த வங்கியைச் சேர்ந்த 12 பேர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி தலைமை மருத்துவர், செவிலியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உள்பட 12 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தருமபுரியை தொடர்ந்து கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனைகளிலும் அதிரடி சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Also see...

First published:

Tags: Blood bank, Dharmapuri