சாமி கும்பிட வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் பணியிடை நீக்கம்!

மந்திரங்கள் சொல்லாமல், அர்ச்சனை செய்யாமல் தேங்காயை மட்டும் உடைத்து தந்தது குறித்து கேட்டதால், லதாவை தர்ஷன் கன்னத்தில் அறைந்துள்ளார்.

சாமி கும்பிட வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் பணியிடை நீக்கம்!
News18Tamil
  • News18
  • Last Updated: November 19, 2019, 2:11 PM IST
  • Share this:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி கும்பிட வந்த பெண்ணை தாக்கிய தீட்சிதர், 2 மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்ற அரசு செவிலியர் லதாவை, அங்கிருந்த தீட்சிதர் தர்ஷன் தாக்கியுள்ளார். மந்திரங்கள் சொல்லாமல், அர்ச்சனை செய்யாமல் தேங்காயை மட்டும் உடைத்து தந்தது குறித்து கேட்டதால், லதாவை தர்ஷன் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் தர்ஷன் மீது 3 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


இதனிடையே, நேற்று நடைபெற்ற கோயில் தீட்சிதர்களின் ஆலோசனை கூட்டத்தில், தர்ஷனை 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

Also see...
First published: November 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...