ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 214 தீட்சிதர்கள்

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 214 தீட்சிதர்கள்

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில், 214 தீட்சிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 27-ம் தேதி தேரோட்டம் நடைபெறாது எனவும் கோவில் உள்பிரகாரத்தில் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து தரிசனத்தில் பங்கேற்க 150 தீட்சிதர்களுக்கு வருவாய்த்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். அனுமதி அளித்த அனைத்து தீட்சிதர்களுக்கும் கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டனர். இதில் கடந்த 26ஆம் தேதி இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு தீட்சிதர்களை சிகிச்சைக்காக ராஜா முத்தையா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவருடன் தொடர்பில் உள்ள தீட்சிதர்களை தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால், அடுத்தநாள் தரிசனம் என்பதால் அனைவரையும் தனிமைப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. இதனை அடுத்து தரிசனத்தில் பங்கேற்க கடுமையான கட்டுப்பாடுகளுடன் 300 தீட்சிதர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து சுழற்சி முறையில் ஆணி திருமஞ்சனம் தரிசனத்தை நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர்.

கடந்த 28ஆம் தேதி தரிசனம் முடிவுற்ற நிலையில் இன்று தரிசனத்தில் பங்கேற்ற 300 தீட்சிதர்களில்  214 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டினர். தனிமைப்படுத்தப்பட்ட தீட்சிதர்கள் 150 பேருக்கு கொரோனா பரிசோதனையை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

First published:

Tags: CoronaVirus