ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பஸ் ஸ்டாப்பில் நடந்த கல்யாணம்! கல்லூரி மாணவனுக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பிய காவல்துறை!

பஸ் ஸ்டாப்பில் நடந்த கல்யாணம்! கல்லூரி மாணவனுக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பிய காவல்துறை!

மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது

மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது

சிதம்பரம் பேருந்து நிழற்குடையில் அமர்ந்தபடி பள்ளி மாணவிக்கு  தாலி கட்டிய மாணவனுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி  அனுப்பி வைத்தனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chidambaram, India

  சிதம்பரம் பேருந்து நிழற்குடையில் அமர்ந்தபடி பள்ளி மாணவிக்கு  தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவனுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி  வழக்குப்பதிவு செய்யாமல் அனுப்பி வைத்தனர். 

  சிதம்பரம் காந்தி சிலை அருகே பேருந்து நிழற்குடை உள்ளது. இந்த பேருந்து நிழற்குடையிலிருந்து சிதம்பரம் நகர் பகுதியில் படிக்கும் மாணவிகள், மாணவர்கள் தங்களது பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.

  அவ்வாறு செல்லும்போது 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி பள்ளி சீருடையிலும், பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் கல்லூரி சீருடையிலும் பேருந்து நிலையத்தில் அமர்ந்த படி தாலி கட்டிக் கொண்டனர்.

  Also: அவனை மறக்க முடியவில்லை.. தற்கொலைக்கு முன் பெண் வெளியிட்ட உருக்கமான வீடியோ

   இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், சிதம்பரம் நகர பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  இந்த நிலையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் விவகாரத்தில் மாணவனுக்கு அறிவுரை வழங்கி பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் சமூக நலத்துறை அதிகாரிகள் மாணவிக்கு அறிவுரை வழங்க அழைத்துச் சென்றனர். சிறார்கள் என்பதால் வழக்கு பதிவு செய்யாமல் வீட்டிற்கு அனுப்பியதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Chidambaram