ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''சிதம்பரம் கோயிலில் இஷ்டத்துக்கு கட்டடம்.. கணக்கு கேட்டா சொல்லணும்'' - தீட்சிதர்கள் மீது சீறிய அமைச்சர்

''சிதம்பரம் கோயிலில் இஷ்டத்துக்கு கட்டடம்.. கணக்கு கேட்டா சொல்லணும்'' - தீட்சிதர்கள் மீது சீறிய அமைச்சர்

சேகர் பாபு

சேகர் பாபு

கோயிலின் சொத்துக்கள், நகைகள் ஆகியவற்றின் நிலையை ஆய்வு செய்வது இந்து சமய அறநிலைத்துறையின் கடமை. அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chidambaram, India

  சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் தங்கள் இஷ்டத்திற்கு மானாவாரியாக கட்டடங்கள் கட்டியுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குற்றம் சாட்டியுள்ளார்.

  சிதம்பரம் நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை அக்கோயில் தீட்சதர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு தீட்சிதர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

  இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் தவறாக இருந்தால் சிதம்பரம் தீட்சிதர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். எங்களுடைய ஒவ்வொரு அடியையும் சரியாக பார்த்து, அளந்து அளந்து எடுத்து வைத்து வருகிறோம்.

  சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல, மன்னர்களால், நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. கோவில் வருமானங்களை முறையான கணக்கு கேட்கின்ற போது கணக்கு காட்டுவது தீட்சிதர்களின் கடமை. நிர்வாக குளறுபடிகளை கேள்விகளாக கேட்கின்ற போது பதில் அளிப்பது அவர்களுடைய கடமை.

  திருக்கோயிலின் உள்ளே மானாவாரியாக அவர்கள் இஷ்டத்திற்கு கட்டிடங்களை கட்டி உள்ளனர். எழுப்பப்பட்டு இருக்கக்கூடிய கட்டிடங்களின் நிலை குறித்து கேள்வி கேட்பது இந்து சமய அறநிலையத் துறையின் கடமை.

  ரேஷன் கடை பொங்கல் பரிசுத்தொகுப்பில் புது மாற்றமா? தமிழக அரசின் நியூ ப்ளான்! (news18.com)

  அந்த கோயிலின் சொத்துக்கள், நகைகள் ஆகியவற்றின் நிலையை ஆய்வு செய்வது இந்து சமய அறநிலைத்துறையின் கடமை. அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. எங்கள் பணி நியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.” என கூறினார்.

  மேலும் இதுகுறித்து தீட்சிதர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் அதனை எதிர்க்கொள்ள தயாராக உள்ளதாகவும் இதில் எந்த விதமான அத்துமீறலும், துஷ்பிரயோகம் இல்லை எனவும் தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chidambaram, Minister Sekar Babu