பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது சிதம்பரம் நடராஜர் கோயில். இங்கே தீட்சிதர்கள் வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தும் குழுக்களின் போராட்டங்களின் விளைவாக அவர்களின் வாழ்க்கை வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாகவும், இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், உள்துறை, தமிழக ஆளுநர், முதலமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி பொது தீட்சிதர் கோவிலை நிர்வகித்து வருவதாகவும், கோயில் நிர்வாகம் மற்றும் மத உரிமைகள் மற்றும் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை அரசியலமைப்பின் 26 வது பிரிவின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன எனவும், அனைத்து மதங்களின் செயல்பாடுகள் கடமைகள் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் பழங்காலத்திலிருந்தே கோயில் பாரம்பரிய பழக்கவழக்கங்களின் படி சமய பிரிவை சேர்ந்த பொது தீட்சிதர்களால் செய்யப்பட்டு வருகின்றன.
சமய விவகாரங்களை 26 வது பிரிவின்படி பொது தீட்சிதர்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும் என 6. 1.2014 தேதியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தீட்சிதர்கள் தேவாரம், பஞ்சபுராணம் ஓதுகின்றனர். இதனை இல்லை என்று சிலரால் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கனகசபை மீது பக்தர்கள் ஏற தமிழக அரசு 17. 5. 2022 தேதியில் அரசாணை பிறப்பித்தது. இதற்க்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்து, சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாகவும். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அருகில் நடக்கும் போராட்டங்களை தடை செய்ய கோரி பொதுநல வழக்கு பக்தர்களால் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.
இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைதியான வழியில் ஆட்சேபனை செய்து வருவதாகவும், ஒரு சிலர் மதக் கடமைகளின் நம்பிக்கைகளில் தலையிட முயற்சிக்கின்றனர் இதனால் தங்களது வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் குறிடப்படடுள்ளது.
Must Read : குரங்கு வைரஸ்.. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் கடிதம்
மேலும், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளே காவல்துறையை பயன்படுத்துவதால் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட மத மற்றும் நிர்வாக உரிமைகளுக்கு நாங்கள் பாதுகாப்பை நாடுவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.