சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், பக்தர்கள் விடிய விடிய போராட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், பக்தர்கள் விடிய விடிய போராட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயில்

இ.பாஸ் நடைமுறையில் இருந்தாலும் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா அறிவிப்பு.

 • Share this:
  சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் மற்றும் தரிசனத்திற்கு இ.பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி தீட்சிதர்களும் பக்தர்களும் விடிய விடிய நடத்திய 7 மணி நேர போடாட்டம் முடிவுக்கு வந்தது.

  இ.பாஸ் நடைமுறையில் இருந்தாலும் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யாவின் அறிவிப்பால் பக்தர்கள் கலைந்து சென்றனர் முறையான எழுத்து பூர்வமான அறிவிப்பு வரும் வரை தேரோட்டம் நடைபெறாது என தீட்சிதர்கள் தகவல்

  இ.பாஸ் நடைமுறை ரத்து என கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்றும், காலை 6 மணிக்குள் சுவாமி தேருக்கு வருவதற்கு முன்பாக இ.பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சாமி தேருக்கு வராது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

  தேரோட்டமும் நடைபெறாது என்றும் அதற்கு பதிலாக தேரோட்டம், தரிசன விழா போன்ற அனைத்தும் நடராஜர் கோவிலுக்கு உள்ளேயே நடைபெறும் எனவும் தீட்சிதர்கள் தெரிவித்தனர். இ.பாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டமும், அதை தொடர்ந்து தீட்சிதர்கள் அறிவிப்பும் சிதம்பரம் நகர பொதுமக்களிடையேயும் பக்தர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
  Published by:Suresh V
  First published: