சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா திருவிழாவில் தகராறு.. தீட்சிதர்கள் மீது வழக்கு

Youtube Video

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா திருவிழா தேரோட்டத்தின்போது, முதியவர் ஒருவரை தீட்சிதர்கள் தாக்கியதாகக் கூறப்படும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நான்கு தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடந்தது என்ன?

 • Share this:
  சிதம்பரம் நடராஜர் கோயில் கீழசன்னதி தெருவில் தேங்காய் பழம் மற்றும் அர்ச்சனை தட்டு கடை வைத்துள்ளார் 65 வயதான பாலசுப்பிரமணியன். இவர் தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பின் மாவட்ட பொருளாளராக உள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில், கடந்த 29ம் தேதி ஆருத்ரா விழாவை ஒட்டி தேரோட்டம் நடைபெற்றது.

  அன்று இரவு தேரிலிருந்து நடராஜர் இறக்கப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது கீழ விதியில் பாலசுப்பிரமணியம் தன் கடையில் இருந்தவாறே கையில் இருந்த பூக்களை நடராஜர் மீது வீசியுள்ளார்.

  அருகில் இருந்த தீட்சிதர்கள் அதை பார்த்துவிட்டு, நடராஜர் மீது பூ வீசுவது மரபு இல்லை என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி பாலசுப்பிரமணியன் பூ வீசியதாகவும் அதைத் தடுக்க தீட்சிதர்கள் முயன்றதாகவும் கூறப்படுகிறது.

  இதையடுத்து, தீட்சிதர்கள் தன்னைத் தாக்கியதாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனது கடையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் பாலசுப்பிரமணியம். சிதம்பரம் போலீசார், பாலசுப்பிரமணியத்திடம் விசாரணை நடத்தி புகாரைப் பெற்றுக் கொண்டதை அடுத்து, உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

  மேலும் படிக்க...2021-ஆம் ஆண்டில் வானில் நிகழவுள்ள 10 அதிசயங்கள் - விளக்கம்

  பாலசுப்பிரமணியத்தின் புகாரை தொடர்ந்து அவரை தாக்கியதாக தீட்சிதர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் நடராஜர் மீது பூக்களை வீசக் கூடாது என்பதைத் தெரிந்திருந்தும், பாலசுப்பிரமணியம் அவ்வாறு நடந்து கொண்டதாக தீட்சிதர்கள் கூறியுள்ளனர்.

  தீட்சிதர்கள் மீதான வழக்கு குறித்து சிதம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கு எந்த திசையில் போகும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: