• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம்! சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்

இந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம்! சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம்.

தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இந்தி தினமான செப்டம்பர் 15-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி குறித்து கருத்து பதிவிட்டார்.

    அதில், ‘இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரு பொது மொழி தேவை. அதிகம் பேரால் பேசப்படுவதால் இந்தி நாட்டின் பொது மொழியாக இருக்க வேண்டும். ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். இந்தி மொழியை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்’ என்று பதிவிட்டிருந்தார்.

    அவருடைய கருத்து நாடு முழுவதும் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவருடைய கருத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க சார்பில் செப்டம்பர் 20-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அமித்ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ப.சிதம்பரம் சிறையிலிருந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம். இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்.


    செப்டம்பர் 20-ம் தேதி தி.மு.க சார்பில் நடத்தப்படும் இந்தி திணப்பு போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கேற்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கே.எஸ்.அழகிரியிடம் வலியுறுத்துகிறேன். எல்லா மொழியின் வளர்ச்சிக்கும் நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். ஆனால், இந்தி மொழி தனியாக இந்திய மக்களை ஒருங்கிணைக்கு என்ற சிந்தனையை ஒரு போதும் ஏற்க மாட்டோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: