ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திறமைகள் இருந்தும் உயரத்தை அடைய முடியவில்லை.. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

திறமைகள் இருந்தும் உயரத்தை அடைய முடியவில்லை.. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

ஆளுநர் ஆர்.என். ரவி

ஆளுநர் ஆர்.என். ரவி

Governor RN Ravi : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் 84-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, 2047ல் இந்தியா உலகின் முதல் நாடாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் 84-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இத்ந விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, 1234 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். இந்த விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் அவர்கள் இருவரும் பங்கேற்கவில்லை.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு பட்டயப்படிப்பு படித்த மாணவ மாணவிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டங்கள் வழங்கப்படாத நிலையில், 2019,2020 ,2020,2021 ஆகிய ஆண்டுகளுக்கான மாணவ மாணவிகளுக்கு சுமார் 1, 21, 525 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரடியாக 1,234 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்த ஆளுநர் ரவி அவர்களுக்கு முன்னதாக அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.சி.சி. மாணவர்கள் வரவேற்பு அளித்து மரியாதை செய்தனர் அதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். பின்னர் விழாவை தலைமை தாங்கி நடத்தினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் ஆர்.என்.ரவி. பேசுகையில், இன்று பட்டம் பெறும் அனைவரையும் நான் முதலில் வாழ்த்துகிறேன். இது உங்களுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியான நாள். இன்று நீங்கள் சாதித்தது உங்கள் கடின உழைப்பாலும் மன உறுதியாலும் சம்பாதித்தது. இது ஒரு மகிழ்ச்சியான நாள். இந்த நாளை நீங்கள் அனுபவியுங்கள். இப்போது நீங்கள் ஒரு புதிய வாழ்க்கையின் வாசலில் நிற்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் இரண்டாவது பழமையான இந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் பாக்கியம் பலருக்கும் கிடைக்கவில்லை. இந்த பல்கலைக்கழகம் நமது தேசிய மறுமலர்ச்சியின்போது வந்தது. நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதற்கு தேவையான அறிவுசார் மூலதனத்தை இந்த நாட்டில் கட்டி எழுப்புவதற்காக அரசியல் மறுமலர்ச்சி நிறுவனமாக அரசியல் ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் விளை பொருளாக இந்த 75 வருட சுதந்திரத்தை கொண்டாடுகின்றோம். இந்த நாட்டில் அபரிமிதமான திறமைகள், வளங்கள் இருந்தாலும் நம்மால் இருக்கக்கூடிய, நாம் செல்ல வேண்டிய உயரத்தை அடைய முடியவில்லை.

விண்வெளியில் நமது நாட்டின் மறுமலர்ச்சிக்கு வாழும் சாட்சியாக மயில்சாமி அண்ணாதுரை இருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சியில் முதல் ஐந்து நாடுகளில் நாமும் இருக்கிறோம். கடலில் மூழ்கி கடலின் அடியில் ஆழமாக இருப்பதை கண்டு பிடிக்கிறோம். வானத்தின் உயரத்தையும் கடலின் ஆழத்தையும் அளவிடும்.அதே வேளையில் நாம் தீர்க்க வேண்டிய அடிப்படை சிக்கல்களையும தீர்க்கிறோம்.

அண்ணாமலைப் பல்கலைகழக பட்டமளிப்பு விழா

அறிவின் உலகம் இணையதளத்தில் இணைப்பதன் மூலம் கிடைக்கிறது. சரியான நபர்களை இணைக்கிறது. தோல்வியைக் கண்டு பயப்பட வேண்டாம். நாம் அனைவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் தோல்வியை சந்திக்கிறோம். அடுத்த 25 ஆண்டுகளில் 2047ல் இந்தியா உலகின் முதல் நாடாக இருக்க வேண்டும்.  இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

Read More : கோடநாடு கொலை வழக்கு : கோவையை சேர்ந்த அதிமுக பிரமுகரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தலைசிறந்த தலைவர்களையும், கல்வியாளர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கி இருக்கிறது.பல்கலைக்கழக பட்டம் என்பது ஒருவருக்கு வேலை வாய்ப்புகளை வழிவகுக்கக் கூடியது. உங்கள் கனவுகளை நினைவாக்க கூடியது.

இன்று நமது நாட்டிற்கு பல துறைகளைச் சார்ந்த மனித மானுட ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் பால்வெளி மண்டலத்தில் ஒரு புள்ளியாக நாம் இருக்கிறோம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த பூமியில் உயிரினங்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. மனிதர்களாகிய நாமும் பல்வேறு வகையில் முன்னேறி இருக்கிறோம்.

Must Read : சுத்தியலா? சாவியா?... பேரூராட்சி தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு சொன்ன ரகசியம்!

நம்முடைய தலைமுறை விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் அளவிடமுடியாத உயரங்களை எட்டி உள்ளது. இந்த வளர்ச்சிகளை நாம் கவனமாக பயன்படுத்த வேண்டும். சமூக, விவசாயம், கல்வி, உடல்நலம் மற்றும் ஆற்றல் மேம்பாடு ஆகிய துறைகளில் சாதிப்பதற்கு நம்மிடம் அதிக மனித வளம் உள்ளது. நோய்த்தொற்றை நாம் கையாண்ட வகை நம்முடைய ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. நமது நாட்டை எதிர்காலத்தில் அமைதியையும், நிறைவையும் பெற்ற நாடாக உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு இந்தியனுக்கும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. கடமை உணர்ச்சியுடன் பணியாற்றி நம் தேசத்தின் வளர்ச்சியை விரிவாக்கும் பணியில் நாம் சந்திக்க இருக்கும் சவால்களை நாம் சாதனைகளாக மாற்றும் சூழல்களை உருவாக்க வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு தருணமும் நமக்கு கற்பித்துக் கொண்டே இருக்கிறது. இது உங்களுடைய வாழ்க்கையின் முதல் நாள் முதல் தருணமாக அமையட்டும். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

First published:

Tags: Chidambaram, Cuddalore, RN Ravi