முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தக்காளி கொடுத்தால் சிக்கன் பிரியாணி இலவசம்...வைரலாகும் அறிவிப்பு!

தக்காளி கொடுத்தால் சிக்கன் பிரியாணி இலவசம்...வைரலாகும் அறிவிப்பு!

தக்காளி விலையேற்றம்

தக்காளி விலையேற்றம்

தக்காளிக்கு சிக்கன் பிரியானி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ள உணவகம், பண்டமாற்று முறை மூலமே விலையேற்றத்துக்கு முற்று புள்ளி வைக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

  • Last Updated :

தக்காளி விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து காணப்படும் நிலையில், ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்றும் இரண்டு கிலோ பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசமாக தரப்படும் என்று செய்யப்பட்ட விளம்பரம் கவனம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.120ஐ கடந்து விற்பனை ஆகி வருகிறது. ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களிலும், வரத்து வரக்கூடிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் தக்காளியின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுவது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தக்காளியை வைத்து ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேல்மருவத்தூர் சோத்துப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஆம்பூர் பிரியாணி உணவகம் தக்காளியை வைத்து வெளியிட்ட விளம்பரம் ஒன்று கவனம் பெற்றுள்ளது.

ஒரு கிலோ தக்காளியை தருபவர்களுக்கு இலவசமாக சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்றும் 2 கிலோ சிக்கன் பிரியாணியை வாங்குபவர்களுக்கு அரை கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்றும் விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த சலுகை இன்று ஒருநாள் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில், பண்டமாற்று முறையே விலையேற்றத்துக்கு முற்றுபுள்ளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்- பொதுமக்களுக்கு வெகுமதி அறிவிப்பு

First published:

Tags: Briyani, Tomato