முகப்பு /செய்தி /தமிழ்நாடு / செஸ் ஒலிம்பியாட் : ஜூலை 28 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

செஸ் ஒலிம்பியாட் : ஜூலை 28 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

‘தம்பி’ குதிரை

‘தம்பி’ குதிரை

வரும், 28ம் தேதி நிகழிச்சியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

செஸ் ஒலிம்பியாட் : ஜூலை 28 ஆம் தேதி இந்த 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்புமாமல்லபுரத்தில், 28ம் தேதி தொடங்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என பொதுப்பணித்துறை  அமைசச்சர் இ.வ வேலு அறிவித்தார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் இம்மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரும், 28ம் தேதி நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு-வை தொடக்க விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில்  செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில்,  தொடக்க விழா நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திடும் பொருட்டு, சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும்  விடுமுறை அளிக்க ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் இ.வ. வேலு, வரும் 28ம் தேதி நான்கு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

First published:

Tags: School Holiday