Home /News /tamil-nadu /

தமிழனாக பெருமைப்பட்டேன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள் - பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழனாக பெருமைப்பட்டேன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள் - பாஜக தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

Annamalai : முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக இல்லாமல் முதல்வராக இன்று நடந்துகொண்டார் அவருக்கு பாராட்டுகள் “

முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக இல்லாமல் முதல்வராக நடந்துகொண்டார் அவருக்கு பாராட்டுகள் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று முதல் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது. இதில், தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். முன்னதாக பா.ஜ.க மைய குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் எல்.முருகன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்தனர்.சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை


இந்த ஆலோசனைக்கு பிறகு  செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “செஸ் போட்டிக்காக பிரதமரின் பங்கு என்ன என்று கோடிட்டு முதல்வர் பேசினார். 5000 ஆண்டு பாரம்பரிய வரலாற்றை காண்பித்தது தமிழனாக பெருமைப்பட்டேன். எனவே முதல்வரை பாராட்டியே ஆகவேண்டும்.
இன்று நடந்த பிரதமர் உடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை என்றார்.

Also Read:  வாய்ப்புகளை தமிழகத்துக்கு தொடர்ந்து தாருங்கள்... பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்

மேலும் பாஸ்போர்ட் விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது செயப்பட்டுள்ளனர்.இதெல்லாம் தமிழகத்தில் கேள்விப்பட்டதே இல்லை இந்த விஷயத்தில்  சரியான விசாரணை நடந்தால் நிச்சயம் பல விவரம் வெளியே வரவும்  எனவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செந்தில்பாலாஜி  மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆண் மகனாக இருந்தால் தான் வீரமென பேசுகிறாரா? ஆண் மகனுக்கு தான் வீரம் இருக்குமா பெண்களுக்கு வீரம் இருக்காதா. மின்சார துறையின் தவறுகளை சுட்டி காட்டும் போது பதில் அளிக்க வேண்டியது அவரின் கடமை. முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக இல்லாமல் முதல்வராக இன்று நடந்துகொண்டார் அவருக்கு பாராட்டுகள் “ என்று தெரிவித்தார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Annamalai, Chess Olympiad 2022, MK Stalin, Modi

அடுத்த செய்தி