Home /News /tamil-nadu /

செஸ் ஒலிம்பியாட் 2022: பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார்

செஸ் ஒலிம்பியாட் 2022: பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார்

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

Chess Olympiad: பிரதமர் அகமதாபாத்திலிருந்து 2.20 க்கு புறப்பட இருந்த நிலையில் 3.10 மணிக்கு புறப்பட்டார். 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை 5.10 மணிக்கு  வந்தடைந்தார்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார்.

    செஸ் விளையாட்டின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.இதற்கான கலை நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். முன்னதாக, பிரதமர் அகமதாபாத்திலிருந்து 2.20 க்கு புறப்பட இருந்த நிலையில் 3.10 மணிக்கு புறப்பட்டார். 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை 5.10 மணிக்கு  வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையார் விமான தளத்துக்கு செல்கிறார். பின்னர் கார் மூலம், நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Chess Olympiad 2022, PM Narendra Modi

    அடுத்த செய்தி