Home /News /tamil-nadu /

Chess Olympiad 2022: கண்கவர் நிகழ்ச்சிகள்.. ஜோதி ஏற்றம்- செஸ் ஒலிம்பியாட் தொடங்கியது

Chess Olympiad 2022: கண்கவர் நிகழ்ச்சிகள்.. ஜோதி ஏற்றம்- செஸ் ஒலிம்பியாட் தொடங்கியது

44வது செஸ் ஒலிம்பியாட்

44வது செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட் ஜோதி. கிராண்ட் மாஸ்டர்களான பிக்ஞானந்தா, குகேஷ் மற்றும் விஜயலட்சுமியிடம் வழங்கப்பட்டது. பின்னர், அவர்கள் மூன்று பேரும் இணைந்து, மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் தீபத்தை ஏற்றிவைத்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தனர்

மேலும் படிக்கவும் ...
  செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.  பிரதமர் மோடி, ஜோதியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.

  இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. முதல் நிகழ்வாக, செஸ் போர்டை பிரதிபலிக்கும் மணல் சிற்பங்களை மும்பையை சேர்ந்த சர்வம் பட்டேல் என்பவர் வரைந்தார். பின்னர் 4.50 மணியளவில், அரங்கிற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அ ளிக்கப்பட்டது. அப்போது முதலமைச்சரின் உருவத்தையும் சர்வம் பட்டேல் மணலில் வடிவமைத்தார்

  இதனை தொடர்ந்து, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செஸ் போட்டியில் பங்கேற்றும் வீராங்கனைகள், வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள், அந்த அந்த நாட்டு கொடிகளுடன் வழிநடத்தி சென்றனர்.

  ஆப்கானிஸ்தான் தொடங்கி அகர வரிசைப்படையில் அணிகள் வரும் போது, டிஜிட்டல் திரையில் அந்நதந்த நாட்டு தேசிய கொடிகள் ஒளிரவைக்கப்பட்டன. தொடர்ந்து தாய் மண்ணே வணக்கம் பாடலை கலைஞர்கள் பாடினர். தாய் மண்ணே வணக்கம் பாடலை தொடர்ந்து பரதநாட்டியத்துடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின.

  ஒவ்வொரு மாநிலங்களின் கலைகளை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. பின்னர் ஃசெஸ் கூட்டமைப்புக்கான பாடல் ஒலிக்கப்பட்டது. இந்திய கிராண்ட் மாஸ்டர் கொனோரு தலைமையில் செஸ் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தமிழ் நாட்டின் ஒப்பற்ற இசை சிறுவன் லிடியன் நாதஸ்வரம், தனது கண்களை கட்டிக்கொண்டு பியனோ இசைத்தார்.

  இதையும் படிங்க: மாமல்லபுரம் கோவில் சிலையை பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

  தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டையில் வந்து பிரதமர் மோடியை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். இதை தொடர்ந்து, பிரதமருக்கு, முதலமைச்சர் நினைவுப் பரிசு வழங்கினார்.

  அடுத்ததாக, நடிகர் கமல்ஹாசன் குரலின் பின்புலத்தில், தமிழர்கள் வரலாறு, கலை, கலாசாரம் மற்றும் சிறப்புகளை பேசும் ஆடியோ ஒலிபரப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த கலைஞர்கள் தமிழர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி  தத்ரூபமாக பண்டைய தமிழகத்தை கண்முன் நிறுத்தி பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.

  மேலும் படிக்க: Chess Olympiad 2022: சதுரங்க கரை பதித்த வேட்டி சட்டை, துண்டில் பிரதமர் நரேந்திர மோடி

  இதையடுத்து, நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை குறிப்பிடும் வகையில், 75 நகரங்களில் பவனி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி, விழா மைதானத்திற்கு எடுத்து வரப்பட்டது. அதை 5 முறை உலகக் சாம்பியனும், செஸ் ஜாம்பவனானுமான விஸ்வநாதன் ஆனந்த், கையில் ஏந்தி வந்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். அதை பிரதமருடன் இணைந்து முதலமைச்சர் பெற்றுக்கொண்டார்.

  இதை தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் ஜோதி. கிராண்ட் மாஸ்டர்களான பிக்ஞானந்தா, குகேஷ் மற்றும் விஜயலட்சுமியிடம் வழங்கப்பட்டது. பின்னர், அவர்கள் மூன்று பேரும் இணைந்து, மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் தீபத்தை ஏற்றிவைத்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்தனர்

   
  Published by:Murugesh M
  First published:

  Tags: Chess Olympiad 2022, MK Stalin, PM Narendra Modi

  அடுத்த செய்தி