214 காவல் ஆய்வாலர்கள் அதிரடி இடமாற்றம்: சென்னை ஆணையர் உத்தரவு!

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சட்டம்- ஒழுங்கு, குற்றம், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள்,  மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த  179 காவல் ஆய்வாளர்கள்  போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த 35 காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 214 காவல் நிலைய காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்

  • Share this:
சென்னையில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 214 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் காவல்துறையில் பணியாற்றக்கூடிய ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை காவல் ஆணையராக சங்கர் ஜிவால் தற்போது  பணியாற்றி வருகிறார். அவர் பொறுப்பேற்ற பிறகு சென்னையில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

முன்னதாக தேர்தலுக்காக சென்னையில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தேர்தல் முடிந்து திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் இடமாற்றம் செய்யப்படாமல் இருப்பதாக காவல் ஆய்வாளர்கள் ஆதங்கம் அடைந்து வந்தனர்.

இந்நிலையில் 214 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சட்டம்- ஒழுங்கு, குற்றம், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள்,  மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த  179 காவல் ஆய்வாளர்கள்  போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த 35 காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 214 காவல் நிலைய காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாடப்புத்தகங்களில் கருணாநிதி வாழ்க்கை வரலாறு: லியோனி தகவல்...

சென்னையில் 5 மாதங்களுக்கு பின்னர் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Murugesh M
First published: