• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முழுநேர வீடியோ பதிவு: பள்ளிக் கட்டணம் செலுத்துதல் - ஆன்லைன் வகுப்புக்கு சென்னை இளைஞர்கள் கண்டுபிடித்த பிரத்யேக ஆப்

முழுநேர வீடியோ பதிவு: பள்ளிக் கட்டணம் செலுத்துதல் - ஆன்லைன் வகுப்புக்கு சென்னை இளைஞர்கள் கண்டுபிடித்த பிரத்யேக ஆப்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்னை இளைஞர்கள் ஆன்லைன் வகுப்புக்கென்று பிரத்யேக ஆப்பை வடிவமைத்துள்ளனர்.

  • Share this:
கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு இணையம்  வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இணைய வகுப்புகளை முழுவதும் பதிவு செய்யும் வகையிலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஓராண்டிற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வாயிலாக நடைபெறக்கூடிய வகுப்புகளில் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்கும் வகையிலும், நெறிமுறைப்படுத்தும் வகையிலும், சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் இணைந்து கென்சில் என்ற செயலியை உருவாக்கி உள்ளனர்.

நரேந்திரன்


இதுகுறித்து இந்த செயலியை வடிவமைத்த குழுவில் இடம்பெற்றுள்ள நரேந்தரன் பாரிவள்ளல் கூறியதாவது, ‘தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய செயலிகள் அனைத்தும் அலுவலக தேவைக்காக உருவாக்கப்பட்டவை. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் என்னென்ன பிரச்சனைகள் எழுகின்றன என்பதை கடந்த ஓராண்டாக கண்காணித்து அவற்றுக்கெல்லாம் தீர்வு கொடுக்கும் வகையில் பிரத்யோகமாக கல்விக்கென இந்த செயலியை உருவாக்கி உள்ளோம். சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும், தெங்கானா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இந்த செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகளை முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருக்கக் கூடிய நிலையில், அதற்கு ஏற்ற வகையில் ஆன்லைன் வகுப்புகளை முழுமையாக இந்த செயலியில் பதிவு செய்ய முடிகிறது. மேலும், வெளிநபர்கள் வகுப்புக்குள் நுழையாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பான முறையில் இந்த செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கட்டணம் செலுத்துவது, பாட வகுப்புகள் நேர அட்டவணை, முடிக்கப்பட்ட வீட்டுப்பாடத்தை பதிவேற்றம் செய்வது, ஆன்லைன் தேர்வுகள், மதிப்பெண் அளிப்பது உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் ஒருங்கிணைத்து செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

மேலும், வகுப்பு தொடங்கும் நேரத்திற்கு நினைவூட்டுவது, மாணவர்கள், ஆசிரியர்கள் என யாருடைய தொலைபேசி எண்ணும் தெரியப்படுத்தாது என்பதும் இதன் மற்றொரு சிறப்பு அம்சம் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளிக்கூடம், ஆசிரியர், மாணவர் பெற்றோர் ஆகிய நான்கு தரப்பினரும் பயன்படக்கூடிய வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு, தொழில்நுட்பத்தின் உதவியால் தீர்வு காணும் வகையில் செயலி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: