• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கைக்கொடுத்த யூடியூப்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி - முதல் திருட்டிலே போலீசிடம் சிக்கிய திருடர்கள்

கைக்கொடுத்த யூடியூப்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி - முதல் திருட்டிலே போலீசிடம் சிக்கிய திருடர்கள்

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள்

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள்

யூடியூப் பார்த்து சாலையில் செல்வோரிடம் வழிப்பறிப்பில் ஈடுப்படுவது எப்படி என்று கற்றுக்கொண்டு கைவரிசை காட்டிய திடீர் திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
    சென்னையில் சாலையில் சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். யூடியூப் பார்த்து திருடியவர்களை காட்டிக்கொடுத்துள்ளது சிசிடிவி.

    சென்னை பல்லாவரம் அடுத்த நாகற்கேனி- திருநீர்மலை பிரதான சாலையில் சனிக்கிழமை காலை சவுந்தர்யா என்ற பெண் நடந்து சென்றுள்ளார். பணிக்கு செல்லும் அவசரத்தில் சென்ற சவுந்தர்யா தனது விலையுயர்ந்த செல்போனை பயன்படுத்தியவாரே சென்றுள்ளார். இதை நோட்டம் விட்ட இளைஞர்கள் இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சவுந்தர்யாவின் செல்போனை பறித்து சென்றனர். சிறிது தூரம் தூரத்தியும் சவுந்தர்யாவால் திருடர்களை பிடிக்க முடியவில்லை .

    Also Read: பூட்டிய வீட்டை டார்க்கெட் செய்து கொள்ளையடிக்கும் தம்பதி கைது..! - போலீசிடம் சிக்கியது எப்படி?

    இச்சம்பவம் தொடர்பாக சவுந்தர்யா சங்கர் நகர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கினர். சவுந்தர்யாவிடம் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட வாகன பதிவு எண்ணை சிசிடிவி காட்சி மூலமாக பெற்ற போலீசார் அதன் விபரங்களை கொண்டு திருடர்களை தேடினர். குன்றத்தூர் பூந்தண்டலம் பகுதியை சேர்ந்த 23 வயதான டேனியல் மற்றும் மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த 47 வயதான சகாயராஜ் ஆகிய இருவரையும் பொலீசார் பிடித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கட்டிட பணியாளரான இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றி வந்துள்ளனர் மது போதைக்கு அடிமையான இருவரும் கையில் பணம் இல்லாததால் எண்ண செய்வது என்று யோசித்துள்ளனர்.நூதனமாக யோசித்த டேனியல் எல்லாத்துக்கும் வீடியோ இருக்குமே யூடியூடிபில் ஏன் திருடுவது எப்படி என்று வீடியோ இருக்காதா என்று தேடியுள்ளார்.



    அதில் கிடைத்த காட்சிகளை கொண்டு நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து திருட முடிவு செய்து சவுந்தர்யாவிடம் தங்கள் முதலாவது திருட்டு தொழிலை தொடங்கியுள்ளனர். ஆனால் புதிய திருடர்களுக்கு யூடியூப் கைகொடுத்தது போன்று சிசிடிவி கை கொடுக்கவில்லை அதனால் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இருவரையும் கைது செய்த சங்கர் நகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: