மது குடிக்க வைத்து இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை - ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் குடியிருப்பு அருகே அதிர்ச்சி சம்பவம்

கொலைசெய்யப்பட்ட ரமேஷ் கொள்ளை வழக்குகளில் அடிக்கடி சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மது குடிக்க வைத்து இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை - ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் குடியிருப்பு அருகே அதிர்ச்சி சம்பவம்
கொலை நடந்த இடம்
  • Share this:
சென்னையில் ஐ.ஏஎ.ஸ்- ஐ.பி.எஸ் அதிகாரிகள் குடியிருப்பு அருகே, பழிவாங்கும் நடவடிக்கையாக இளைஞர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏஎ.ஸ்- ஐ.பி.எஸ் அதிகாரிகள் குடியிருப்பு, எதிரில் உள்ள மைதானத்தில் வடபழனியைச் சேர்ந்த சேர்ந்த நபர் ஒருவர் நேற்றிரவு 9.30 மணியளவில் மர்ம நபர் சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தகவலறிந்த விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை அடுத்து, வட பழனியைச் சேர்ந்த விஜய் மற்றும் பாபு என்கிற கோழி பாபு ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்தனர்.


விசாரணையில் வடபழனி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை தாங்கள் ஆறு நபர்கள் சேர்ந்து பேரும் சேர்ந்து கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.  மேலும் விசாரணையில், கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வளசரவாக்கம் இந்திரா நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த தேவாவின் தம்பியான அஜித்குமார் (18) என்பவரை ரமேஷ் கஞ்சா வங்குவதத்காக கண்ணகி நகர் அழைத்து சென்றதாக தெரியவருகிறது.

பின்னர் தனது நண்பர்களுடன் சோழிங்கநல்லூர் சென்று அங்குள்ள ஏரியில் அனைவரும் போதையில் குளிக்கும் போது அஜித்குமார் ஏரியில் மூழ்கி இறந்ததாகதாக சொல்லப்படுகிறது. தன் தம்பி சாவுக்கு ரமேஷ் தான் காரணம் எனக் கருதிய அஜித்குமாரின் அண்ணன் தேவா கொலைவெறியில் சுற்றி வந்துள்ளார்.

இதனால், ரமேஷை கொலை அவரது நண்பர்களை ஏவி விட்டுள்ளார் தேவா. கொலை செய்வதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்த அஜித் குமாரின் நண்பர்களான வட பழனியைச் சேர்ந்த விஜய், பாபு (எ) கோழி பாபு(20), கொரிலா (எ) சஞ்சய் (20), மாவாட்டி (எ) மணிகண்டன் (19), ஆறுமுகம் (எ) அலர்ட் ஆறுமுகம் (19), லட்சுமி நகரை சேர்ந்த விஜய் ஆகியோர், நேற்று மாலை விருகம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆபீஸர் குடியிருப்புக்கு எதிரே உள்ள மைதானத்திற்கு ரமேஷை அழைத்து சென்றனர்.அங்கு ஆறு நபர்களும் சேர்ந்து ரமேஷை அதிகமான மது குடிக்க வைத்துள்ளனர். பின்னர் மது மயக்கத்தில் இருந்த ரமேஷ் சத்தம் போடாமல் இருக்க சிலர் வாயை பொத்திக் கொண்டும் மற்றவர்கள் சேர்ந்து கழுத்து மார்பு கை கால் என ரமேஷை கொடூரமாக வெட்டி உள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ரமேஷை அங்கிருந்த முட்புதர் அருகே போட்டுவிட்டு அனைவரும் சென்று விட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அஜித்குமாரின் அண்ணனான தேவா, மற்றும் அஜித் குமாரின் நண்பர்களான விஜய், கோழி பாபு, கொரில்லா சஞ்சை ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைசெய்யப்பட்ட ரமேஷ் கொள்ளை வழக்குகளில் அடிக்கடி சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading