கார் நம்பர் பிளேட்டில் எழுதப்பட்ட வார்த்தைகளால் கைதான கல்லூரி மாணவர்!

பிடிபட்ட காரை 2 ஆண்டுகளுக்கு முன்னர் எர்ரோல் வாங்கியுள்ளதாகவும், எனினும், பழைய உரிமையாளரின் பெயரிலேயே ஆர்.சி புக் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

news18
Updated: April 24, 2019, 1:41 PM IST
கார் நம்பர் பிளேட்டில் எழுதப்பட்ட வார்த்தைகளால் கைதான கல்லூரி மாணவர்!
கைதான மாணவர்
news18
Updated: April 24, 2019, 1:41 PM IST
சென்னையில் கார் நம்பர் பிளேட்டில் பெண்கள் குறித்து இழிவான கருத்து எழுதியிருந்த கல்லூர் மாணவர் 4 மாத தேடலுக்குப் பிறகு கைது செயப்பட்டுள்ளார்.

பெண்கள் குறித்து இழிவான கருத்து எழுதப்பட்டிருந்த நம்பர் பிளேட் கொண்ட காரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் சில மாதங்களுக்கு முன்னர் பரவியது. இந்நிலையில், மாதாவரம் பகுதியில் இந்த காரை பார்த்த துணை கமிஷ்னர் ராவளி பிரியா 8 கி.மீ விரட்டிப்பிடித்து காரை மடக்கினார்.

காரில் இருந்த கல்லூரி இறுதியாண்டு மாணவர் பிராட்போர்ட் எர்ரோல் (22) கைது செய்யப்பட்டுள்ளார். காரை பிடித்த போது அவர் குடிபோதையில் இருந்ததாக துணை கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.

“4 மாதங்களாக அந்த காரை தேடி வருகிறோம். காரை துரத்த தொடங்கியதும், அதனை உணர்ந்துகொண்ட எர்ரோல் சின்னல்களில் கூட நிற்காமல் வேகமாக சென்றார். அதன் பின்னர் பிடிக்கப்பட்டது” என்று துணை கமிஷ்னர் கூறினார்.

பிடிபட்ட காரை 2 ஆண்டுகளுக்கு முன்னர் எர்ரோல் வாங்கியுள்ளதாகவும், எனினும், பழைய உரிமையாளரின் பெயரிலேயே ஆர்.சி புக் இருப்பதாகவும் அதற்கும் சேர்த்து வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

படிக்க... "நான் யாரை சந்தேகப்படுவது?” 42 சவரன் தங்க நகைகளை பறிகொடுத்த இமான் அண்ணாச்சி வேதனை

First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...