திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக வெளிநாட்டு பெண் புகார்... சென்னை இளைஞர் கைது

திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக வெளிநாட்டு பெண் புகார்... சென்னை இளைஞர் கைது
புகாரளித்த பெண் மற்றும் கைது செய்யப்பட்ட தந்தை மகன்
  • News18
  • Last Updated: October 17, 2019, 9:47 AM IST
  • Share this:
ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சென்னை அழைத்து வந்து கருக்கலைப்பு செய்த இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தந்தை சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ருமேஸ் அகமது. இவர் மீன் கொள்முதல் வியாபாரம் செய்து வருகிறார். இதன் காரணமாக இவர் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்றுவந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் வியாபாரம் சம்பந்தமாக சில ஆண்டுகளுக்கு முன் இவர் துபாய் சென்றுள்ளார். அங்கு ஐரோப்பியாவிலிருந்து வந்து துபாயில் மேல் படிப்பு படித்துக்கொண்டிருந்த உக்னே பெரவேரி செவைத்(22) என்ற பெண்ணை சந்தித்துள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் நட்பு ஏற்பட அதுவே காதலாக மாறியுள்ளது.


காதலின் காரணமாக அந்த பெண் கருவுற்ற நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென ருமேஸ் அகமதுவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் ருமேஸ் அகமது அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு இந்தியா திரும்பிய நிலையில் கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளார்.

மேலும் 5 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணுக்கு, ருமேஷ் அகமது மற்றும் அவரது தந்தை வற்புறுத்தலின் பேரில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருகலைப்பு செய்துள்ளனர்.

மேலும் கருக்கலைப்பு செய்த பின் ருமேஸ் அகமது உடனான காதலில் அந்தப் பெண் மீண்டும் கருவுற்று இருக்கிறார். இதனால் இந்தமுறையும் கருவை கலைத்து விட வேண்டும் என சொல்ல இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து தற்போது எழும்பூர், மாண்டியத் தெருவில் தங்கியுள்ள அந்த பெண் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி துபாயில் இருந்து அழைத்து வந்து ஏமாற்றுவதாக ருமேஸ் அகமது மீது புகார் நேற்று மாலை அளித்தார்.

இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் ருமேஷ் அகமது , உடந்தையாக இருந்து பெண்ணை மிரட்டிய அவருடைய தந்தை தொழில் அதிபர் அப்துல் கரீம் என்பவரை கைது செய்தனர்.

First published: October 17, 2019, 9:47 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading