பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு: இளம்பெண் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என உறவினர்கள் புகார்

தனலட்சுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சையளித்ததால்தான் அவர் இறந்தார் என்று உறவினர்கள் புகார் கூறுகின்றனர்.

பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு: இளம்பெண் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என உறவினர்கள் புகார்
யோகேஷ் குப்தா, தனலட்சுமி.
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 4:19 PM IST
  • Share this:
சென்னை போரூர் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த தம்பதியினர் யோகேஷ் குப்தா, தனலட்சுமி (27) தம்பதியினர். தனலட்சுமிக்கு 11 மாதங்களுக்கு முன் வடபழனி விஜயா மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததற்குப் பின் தனலட்சுமிக்கு இரத்தப்போக்கு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தனலட்சுமி வடபழனியிலுள்ள விஜயா மருத்துவமனைக்கு சோதனைக்காக வந்துள்ளார். அப்போது வயிற்றில் பிரச்னை உள்ளதால் ’D and C’ சிகிச்சை மேற்கொண்டு சரிசெய்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காலை 7.30 மணி அளவில் டி அண்ட் சி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனலட்சுமி 11 மணி அளவில் அதிக ரத்தப் போக்கின் காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தனலட்சுமியின் குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர்.

Also read: மாட்டுச்சாணம் முதல் நீராவி வரை: கொரோனாவை குணப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்ட வினோதமான பொய் மருத்துவ முறைகள்..


நன்றாக சிகிச்சைக்கு வந்த தனலட்சுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் பயிற்சி மருத்துவர்கள் கொண்டு மருத்துவம் பார்த்ததால் மட்டுமே அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டார் எனவும் தனலட்சுமியின் இறப்பிற்கு மருத்துவமனை நிர்வாகம் மட்டுமே காரணம் எனவும் தனலட்சுமியின் குடும்பத்தார்கள் தெரிவித்து உடலை வாங்க மறுத்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து வடபழனி காவல் நிலையத்தில் தனலட்சுமி குடும்பத்தார்கள் புகார் அளித்தனர்.

தகவலறிந்த தி.நகர் துணை ஆணையர் ஹரிஹிரன் நேரில்வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும், தனலட்சுமி இறந்ததற்குக் காரணம் என்ன என்பதை அறிவதற்காக அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.இந்தச் சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading