டியோ பைக்குகளை குறிவைத்து திருடும் இளம்பெண்கள்... சிசிடிவி காட்சிகள் வெளியானது

டியோ பைக்குகளை குறிவைத்து திருடும் இளம்பெண்கள்... சிசிடிவி காட்சிகள் வெளியானது
  • Share this:
சென்னையில் டியோ இருசக்கர வாகனங்களை மட்டும் திருடி வந்த பெண்ணை, பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருவல்லிக்கேணி தாயார் சாகிப் தெருவை சேர்ந்தவர் யாசர் அராபத். இவர் புத்தாண்டு தினத்தன்று தனது டியோ இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். வீட்டின் முன்பு சிசிடிவியும் அதற்கான மானிட்டரும் வைத்துள்ளார் யாசர் அராபத். சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருந்த யாசர் அராபத் சட்டென அதிர்ச்சியில் உறைந்தார்.

அவரது வீட்டிற்கு வந்த இரண்டு இளம்பெண்களின் நடவடிக்கைள் தான் அவரது அதிர்ச்சிக்கு காரணம். இளம் பெண்களில் ஒருவர் அவரது வீட்டிற்கு எதிரே இருட்டில் மறைந்து நின்று நோட்டமிட மற்றொருவர் பக்கத்து வீட்டு படிக்கட்டில் அமர்ந்துகொண்டார். அக்கம் பக்கம் நோட்டமிட்ட பெண் அங்கு நிறுத்தப்பட்டிருந்த யாசார் அராபத்தின் ஸ்கூட்டரில் அமர்ந்தபடி கள்ளச்சாவி போட்டு திறக்க முயன்றார்


இந்த காட்சிகளை வீட்டின் சிசிடிவி மானிட்டரில் பார்த்த யாசர் உடனடியாக கீழே இறங்கி ஓடி வந்தார். அவரைக் கண்டதும் இளம்பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்; விரட்டிய போது அவர்களில் ஒருவர் சிக்கினார் அவரைப் பிடித்து அங்கிருந்த வீட்டின் கதவுகளுக்கு இடையில் யாசரும் அவரது வீட்டினரும் சிறை வைத்தனர்தான் திருடவே இல்லை என சாதித்த அந்த பெண் யாசருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த திருவல்லிக்கேணி போலீசார் அங்கு விரைந்து அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர் 19 வயதான சந்தியா என்பதும் தப்பி ஓடியவர் அவரது தோழி மோனிஷா என்பதும் தெரியவந்தது.

சந்தியா மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும் அவர் மீது கஞ்சா விற்ற வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. சந்தியாவை சிறைக்கு அனுப்பிய போலீசார், தலைமறைவான அவரது தோழி மோனிஷாவை தேடி வருகின்றனர்.

 
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்