வரதட்சணை கேட்டு அழுத்தம் தந்த குடும்பம்: காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தற்கொலை..

Youtube Video

காதல் திருமணம் செய்துகொண்ட 19 வயது இளம்பெண் மூன்றே மாதத்தில் தற்கொலையைத் தேர்ந்தெடுத்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

 • Share this:
  சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார்-சத்தியவாணி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள். மூத்த மகளான 19 வயது தீபிகா, அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான பிரசாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிந்துள்ளது.

  பெற்றோர் கண்டித்த நிலையில், கடந்த மே 8 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய தீபிகா பின்னர் வீடு திரும்பவில்லை. பல்லாவரம் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என்று தீபிகாவின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தீபிகா தனது காதலர் பிரசாந்த் உடன் இருப்பது தெரியவந்தது.

  போலீசார் விசாரணையில் மே மாதம் 9ஆம் தேதி இருவரும் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இருவரும் திருமண வயது நிரம்பியவர்கள் என்பதால் தீபிகாவை பிரசாந்த் உடன் அனுப்பி வைத்தனர். திருமணத்திற்கு பெற்றோர் செய்ய வைத்திருந்த நகையை வாங்கி வருமாறு பிரசாந்தின் தாயார் தீபிகாவிடம் கூறியுள்ளார்.

  தீபிகாவும் தனது தாயார் வீட்டுக்கு சென்று நகையை கேட்டதாக கூறப்படுகிறது தங்களுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட மகளின் மீது கோபத்தில் இருந்த பெற்றோர், வேறு வழியின்றி நகையை கொஞ்சநாள் கழித்து தருவதாக கூறியுள்ளனர். தொடர்ந்து ஆடி மாதத்தை ஒட்டி கடந்த 20-ஆம் தேதி தீபிகா தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

  காதல் கணவரின் நடவடிக்கை சரியில்லை என்றும், மாமியார் நகை கேட்டு நச்சரிப்பதாகவும் தாயிடம் கூறி அழுதுள்ளார். ஆடி மாதம் முடிந்து செல்லும்போது நகை போட்டு அனுப்புவதாகக்கூறி அவரது தாயார் சமாதானம் செய்துள்ளார். மேலும், நீயே விரும்பி தேர்வு செய்து கொண்ட வாழ்க்கை, பிரச்னைகளை நீதான் சமாளித்து வாழவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.

  வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த தீபிகா மதியம் 3 மணி வரை சாப்பிட வராதால் அவரது தயார் அறையை திறந்து பார்த்துள்ளார். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் தீபிகா சடலமாக இருந்துள்ளார். உடலை இறக்கிய பெற்றோர், பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

  அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர் திருமணமாகி மூன்றே மாதத்தில் பெண் இறந்ததால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


  Published by:Vijay R
  First published: