உலக மக்கள் தொகை தினம்: சென்னை பெசன்ட் நகரில் விழிப்புணர்வு பேரணி!

World Population Day | பிறப்பு, இறப்பு விகிதங்கள் குறைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் கொள்கைகள் தமிழகத்தில் முழுமையாக கடைபிடிப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Web Desk | news18
Updated: July 11, 2019, 12:02 PM IST
உலக மக்கள் தொகை தினம்: சென்னை பெசன்ட் நகரில் விழிப்புணர்வு பேரணி!
பேரணியை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்
Web Desk | news18
Updated: July 11, 2019, 12:02 PM IST
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

இன்று உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இன்று காலை  சென்னை பெசன்ட் நகரில் விழிப்புணர்வு பேரணி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

அவரோடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த பேரணியில் சென்னையில் உள்ள காயிதே மில்லத், எத்திராஜ் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பிறப்பு, இறப்பு விகிதங்கள் குறைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் கொள்கைகள் தமிழகத்தில் முழுமையாக கடைபிடிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் வெளிமாநிலத்தவர்கள் விண்ணபிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளைத்தவர், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் வேறு மாநிலத்தை சேர்ந்தவருக்கு கிடைக்கக் கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டு வருகிறோம்.

இதைத் தாண்டி போலி சான்றிதழ் சமர்பித்தால் கடுனையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு மருத்துவ இடம் ரத்து செய்யப்படும். விண்ணப்ப அளவிலேயே 3600 பேரை நிராகரித்துள்ளோம்.
தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லை. புகார்கள் இருந்தால் உடனடியாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும் பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்தவர், ஏற்கனவே சட்டசபையில் துணை முதலமைச்சர் கூறியதுபோல் சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க... அப்பா-அம்மா சண்டையை விலக்கிவிட்ட 7 வயது மகள் மீது நடந்த தாக்குதலால் உயிரிழந்த சோகம்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...