Chennai SubUrban Trains | சென்னை புறநகர் ரயிலில், வியாபாரம் செய்யும் பெண்கள், விளையாட்டு வீரர்கள் பயணிக்க அனுமதி..

கோப்பு படம்

சென்னையில் இயக்கப்படும் புறநகர் மின்சார சிறப்பு ரயில்களில் நாளை முதல் பெண் வியாபாரிகள், விளையாட்டு வீரர்கள் பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்போது ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வழக்கமான பயணிகள் மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. எனினும், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் நெரிசல் இல்லாத நேரங்களில் பெண்கள் பயணிக்க அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ரயில்களில் நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் இன்று முதல் பயணம் செய்யலாம் எனவும், பயணிக்கும் மாணவர்கள் ஹால் டிக்கெட் வைத்திருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பெண் வியாபாரிகளும் மின்சார ரயில்களில் இன்று முதல் பயணம் செய்யலாம். போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களும் உரிய அடையாள ஆவணங்களுடன் புறநகர் மின் ரயில்களில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...திமுகவிடம் இருந்து தேவையான தொகுதிகளை கேட்டு பெறுவோம்: கே.எஸ். அழகிரி



    மேலும் திங்கள் முதல் சனி வரை, நான் பீக் அவர்-களில் பெண்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ள தெற்கு ரயில்வே, ஞாயிற்றுக்கிழமைகளில் எந்நேரமும் பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 12 வயது வரையுள்ள குழந்தைகள், சிறுவர் சிறுமியரை பெண்கள் தங்களுடன் அழைத்துச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published: